ஆசியாவிலேயே உயரமான விநாயகர் சிலை.. 2 டன் மலர்களால் அலங்கரித்து, 16 வாசன திரவியங்களால் பூஜை!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2024, 10:48 am

இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர் சிலை இருக்கக்கூடிய கோவை புலியகுளம் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெறுகிறது.

இங்குள்ள விநாயகர் சிலை 19 அடி உயரமும் பத்து அடி அகலமும் கொண்ட சிலையாகும். இன்றைய தினம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 50 கிலோ சந்தன காப்பும்,இரண்டு டன் மலர்களாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை முதலே விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்கள் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் அன்னதானமும் வழங்கப்படுகிறது.மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?