அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2025, 6:57 pm
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே ஆயத்தமாகியுள்ளது.
குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுக, பகையை மறந்து மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2021 தேர்தலில் கூட்டணி போட்ட நிலையில், மீண்டும் கூட்டணி போடமாட்டோம் என உறுதியாக கூறினர்.
இதையும் படியுங்க: காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!
ஆனால் என்ன நடந்ததோ, திடீரென அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டார். உடனே கூட்டணி அறிவிப்பும் வெளியானது.
இந்த நிலையில் தான், அதிமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என அண்ணாமலை ஒரு லிஸ்டையே தயார்படுத்தி மேலிடத்திற்கு கொடுத்துள்ளாராம்.
அதாவது, பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவிடம் 84 தொகுதிகள் கேட்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் 20.5% ஓட்டுகளை அதிமுக பெற்றது, அதே போல பாஜக 18.5% வாக்குகளை பெற்றது. மக்களவை தேர்தலுடன் நடந்த விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக 2ஆம் இடமும், அதிமுக 4வது இடமும் பெற்றது. கடந்த 2024 தேர்தலில் பாஜக 12 தொகுதிகள் கேட்டது. ஆனால் 6 தொகுதிகள் தான் தர முடியும் என அதிமுக கூட்டணியை முறித்தது.
இந்த நிலையில் கடந்த நிகழ்வுகளை போல நடக்கக்கூடாது என்பதால் மக்களவை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் அடிப்படையில் பாஜகவிற்கு 84 தொகுதிகள் அதிமுக கொடுக்க வேண்டும், அதற்கு கீழ் இறங்கினால் ஒத்துக்கொள்ள கூடாது என அண்ணாமலை மேலிடத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
84 தொகுதிகளை பெற்றால்தான் பாஜக கூட்டணியில் உள்ள ஆதரவு கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வழங்க முடியும் என அண்ணாமலை சில யோசனைகளை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.