மின்சார விலை உயர்வு குறித்து ஸ்டாலின் சம்சாரத்திடம் கேளுங்க : பொதுக்கூட்டத்தில் திமுகவை அலறவிட்ட அதிமுக அவைத்தலைவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 11:55 am

மின் கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் நடைபெற்றது .

இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கூட்டத்தில்
பேசுகையில், நான் மதுசூதனனை போன்று அவை தலைவராக வரவில்லை
அதிமுகவிற்கு செய்த தியாகத்தின் காரணமாக அவைத்தலைவர் பதவியை எடப்பாடி தனக்கு வழங்கியுள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

முன்னாள் திமுக அமைச்சர் ஆ ராசா இந்துமதத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை மேகொண்டார். இன்று வரை அவர் வாய் திறக்கவில்லை.

அவரை ஏன் கட்சியில் வைத்துள்ளீர்கள் என்றும் திமுகவில் உள்ளவர்கள் எந்த சமுதயாத்தை சேர்ந்தவர்கள் என ஆவேசமாக பேசிய அவர், திமுகவில் உள்ளவர்கள் பதவியில் இருந்து விலகுங்கள் என கூறிய அவர்
மின்கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!