பிரியாணிக்கு பில் கட்டாமல் கத்தியை காட்டி மிரட்டி அராஜகம் : பிரபல ரவுடிகள் கைது

Author: kavin kumar
28 February 2022, 1:17 pm

சென்னை : கொளத்தூர் அருகே பிரியாணி கடை மேலாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பிரபல ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பஸ் நிறுத்தம் அருகே தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த தயாநிதி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது உணவகத்திற்கு பிரியாணி சாப்பிட , சென்னை அடுத்த செங்குன்றம் சோலையம்மன் நகரைச் சேர்ந்த குமார் என்கிற வாட்டர் வாஷ் குமார்(31) என்பவரும் பாடியில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கோபிநாத் (25) ஆகிய இருவரும் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் மேலாளர் தயாநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் ரவுடிகள் எங்களிடமே பணம் கேட்கிறாயா…? என கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் 1500 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து ஓடினர். மேலும் கடையில் உள்ள டிவி அலங்கார பொருட்களையும் கத்தியால் அடித்து உடைத்து நாசப்படுத்தினர். இச்சம்பவத்தை உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் பார்த்து அங்கிருந்து பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது சம்பந்தமான சி.சி.டி.வி கண்காணிப்பு பதிவு உள்ளதையும் வைத்து உணவக மேலாளர் தயாநிதி கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட கொளத்தூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு தெரிப்படுத்தியதில் உடனடியாக போலீசார் களத்தில் இறங்கி செங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி குமார் என்கின்ற வாட்டர் வாஷ்குமார் மற்றும் பாடி கோபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில்,
இவர்கள் இருவரின் மீதும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள காவல் நிலையில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Playback SInger P Jayachandran died இந்தப் பாடல்களெல்லாம் இவர் பாடியதா? காலத்தால் அழியாத பாடகர் ஜெயச்சந்திரனின் சுவடுகள்!
  • Views: - 1644

    0

    0