குடிநீர் வேகமாக வரவில்லை என மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் : ஒருவர் மீது வழக்குப்பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 4:02 pm

கோவை மாநகராட்சி பணியாளராக இருப்பவர் கணேசன். இவர், மாநாகராட்சியில் தண்ணீர் திறந்து விடும் பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று 70, 72, 73, மற்றும் 80 வது வார்டுகளில் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். அப்போது அந்த வார்டை சேர்ந்த கந்தசாமி(எ) கார்த்திக் மாநகராட்சி பணியாளர் கணேசனிடம் தண்ணீர் வேகமாக வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில கந்தசாமி கணேசனை தாக்கி உள்ளார்.

இது குறித்து மாநகராட்சி பணியாளர் கணேசன் அளித்த புகாரின் பேரில் கந்தசாமி மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை வரும் செயல்படுதல், திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 376

    0

    0