சொத்து தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு ; ஒருவர் பலி.. தம்பியைக் கொன்ற அண்ணன் கைது..!!
Author: Babu Lakshmanan19 August 2022, 12:43 pm
விருதுநகர் ; சிவகாசி அருகே சொத்து தகராறு 4 பேருக்கு அரிவாள் விட்டு விழுந்தது இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன் (52 )முருகேஸ்வரி (48) முருகன் (32), மணிகண்டன் (29), ராஜேஸ்வரி (24), விநாயகமூர்த்தி (22) ஆகிய 6 பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களிடையே நீண்ட காலமாக குடும்ப சொத்து பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்நிலையில், சொத்து பிரச்சனை குறித்து பேசி முடிவு எடுக்க முத்தீஸ்வரன் அனைவரையும் அழைத்துள்ளனர். அதன்பேரில், அனைவரும் நேற்று மாலை சிவகாசி ஒரு அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் முத்தீஸ் வரன் வீட்டில் ஒன்றுகூடி பேசியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, ஒருவருக்கு ஒருவர் வாய் தவறாக ஏற்பட்டுள்ளது. இதில், கம்பு, அரிவாள், கடப்பாறையால் ஒருவருக்கொருவர் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், முருகன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் முருகன் மனைவி இந்திராதேவி, அவரது தாயார் பெரியதாய், மணிகண்டன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த நிலையில், மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக முத்தீஸ்வரனை போலீஸார் கைது செய்து, மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.