பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனை… அண்ணனை துப்பாக்கியால் சுட்ட சகோதரன் ; மருத்துவமனையில் அனுமதி!!

Author: Babu Lakshmanan
1 May 2024, 10:11 pm

திருப்பத்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை கள்ளத் துப்பாக்கியால் சித்தப்பா மகன் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு, வலதலப்பட்டு பகுதியைச் சார்ந்த ராமன் என்பவருக்கு குள்ள காளி மற்றும் லட்சுமணன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், குள்ளகாளியின் மகன் காளி (60) என்பவருக்கும், அவருடைய சித்தப்பா லட்சுமணன், இவருடைய மகன் சம்பத் (36) என்பவருக்கும் இடையே பல வருடங்களாக நில பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

மேலும் படிக்க: விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் அல்ல… மீள முடியாத கடன் சுமையில் தள்ளும் திமுக அரசு ; அன்புமணி குற்றச்சாட்டு..!!

அதனை தொடர்ந்து இன்று திரும்பவும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த லட்சுமணன் மகன் சம்பத், தான் மறைத்து வைத்திருந்த கள்ள துப்பாக்கியை எடுத்து, காளி மீது சுட்டதில் நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் கள்ள துப்பாக்கியால் சுட்ட சம்பத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

சொத்துக்காக பெரியப்பா மகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 298

    0

    0