கல்லூரி பேராசிரியர் கழிவறையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!
Author: Hariharasudhan24 December 2024, 2:23 pm
சென்னையில் கல்லூரிப் பேராசிரியர் வீட்டின் கழிவறையில் கவர் சுற்றியபடி உயிரிழந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: உத்தப் ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரகாத் குமார் கர்வார் (32) – அக்ஷனா பிரகாத் குமாரி தம்பதி. கர்வார், தனது மனைவியுடன் சென்னை அடுத்த மதுரவாயலில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கர்வாரின் மனைவி, அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால், அருகில் வசிக்கும் சோனி என்பவருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீடு பூட்டிக் கிடந்ததால், ஜன்னல் வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துள்ளனர். அப்போது கர்வார், கழிவறையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து, அவரது சடலத்தை மீட்ட போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வெளியான பிரேதப் பரிசோதனை முடிவில், அதிக உணர்ச்சிகளுக்காக முகத்தில் கவரைச் சுற்றியபடி சுய இன்பம் காணுவது போல், கர்வாரும் அதற்கு முயற்சி செய்து உள்ளார் என்பதும், இதனால் மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார் என்றும் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: நாய்களுக்கு கூட உங்களை.. விமர்சித்தவர்களை விளாசிய திரிஷா!
ஆனால்,அவர் மாத்திரை அல்லது மருந்து வடிவில் வேறு ஏதேனும் உட்கொண்டாரா அல்லது வேறு யாராலும் கொலை செய்யப்பட்டு, கவர் சுற்றப்பட்டு இறந்து கிடந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.