கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தடுத்து நிறுத்தம் : அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 9:56 pm

கோவை விமான நிலைய நுழைவாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் மத்திய அமைச்சர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் நுழைவு அனுமதி சீட்டு இல்லாததால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார்.

அவரை வரவேற்க வந்திருந்த துறை அதிகாரிகள், அமைச்சர் முருகன் வர காலதாமதம் ஆகும் என நினைத்து விமான நிலையத்திற்குள் எல்.முருகனின் நுழைவு அனுமதி சீட்டுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் சீக்கிரமே கோவை விமான நிலையம் எல்.முருகன் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது, நுழைவு அனுமதி சீட்டு இல்லாததால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு சில நிமிடங்களில் அதிகாரிகள் நுழைவு அனுமதி சீட்டுடன் வந்த நிலையில் எல்.முருகன் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே மத்திய அமைச்சர் முருகன் தன்னுடன் வந்தவர்களை கடுமையாக சாடினார்.

இதற்கு முன்னரும் இதே போல் நடந்துள்ளது எனவும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அதிகாரிகளிடம் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

  • Sundar C new movie மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!