திடீரென 60 அடிக்கு உள்வாங்கிய கடல் நீர்.. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்..!
Author: Vignesh2 September 2024, 10:39 am
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்வது வழக்கமான செயல்.

முன்னதாக, ஆவணி தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்செந்தூரில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், திருச்செந்தூரில் இன்று திடீரென அறுபது அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கியது. இதனால், கடலில் உள்ள பாறைகள் வெளியில் தெரிய தொடங்கின. அவற்றின் மீது நின்ற பக்தர்கள் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி விட்டு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.