அட்லி கேட்ட சம்பளம்.. கையெடுத்து கும்பிடு போட்டு அனுப்பிய முன்னணி ஹீரோ.!
Author: Rajesh15 May 2022, 11:26 am
தமிழில் ராஜாராணி படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகி மிக குறுகிய கால கட்டத்திலேயே, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவரது இயக்கத்தில் மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.
தமிழ் சினிமாவில் விஜயின் பேவரைட்இயக்குநரான அட்லீ, பிகில் படத்திற்கு பிறகு, ஹிந்தியில் பிரபல நடிகர் ஷாருக்கானை வைத்து படம் எடுத்து வருகிறார்.
லயன் என பெயரிப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷாருகனுக்காக ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஷாருகான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக அட்லீ பல்வேறு விதமான சண்டை காட்சியில் உருவாக்குவதால் கோடிக்கணக்கில் செலவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் திரைப்படம், ரூ 200 கோடி பட்ஜெட்டில் செலவில் உருவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அட்லீயிடம் படம் பண்ண வேண்டும் என்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், அழைத்து பேசியுள்ளார். அப்போது அட்லீ தனக்கு சம்பளமாக 35 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால், அதை கேட்டு அதிர்ச்சி ஆன அல்லு அர்ஜுன் இதற்கு வாய்ப்பே இல்லை என்று அவரிடம் கூறி அனுப்பிவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தகவல் தெரியவந்துள்ளது.