இயக்குனர் அட்லி முதன்முறையாக பாலிவுட்டில் இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது படப்பிடிப்பை விரைந்து முடித்து அடுத்த ஆண்டு ரிலீஸுக்கு படத்தை தயார் செய்யுள்ளனர். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் நயன்தாரா, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. ஜவான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் உள்ள ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற நயன்தாராவின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஷாருக்கான் சென்னை வந்திருந்தார்.
இந்நிலையில் நயன்தாராவும் தற்போது ஹனிமூன் சென்று வந்தவுடன் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மேலும் ஷாருக்கான் ஜவான் படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். அட்லியுடன் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜவான் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரு பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி உள்ளது. இப்படத்தில் திரை அரங்கு வெளியீட்டுக்குப் பிறகு ஓடிடிக்கு கொடுக்க படக்குழு முடிவு செய்திருந்தார்கள்.
அதன்படி பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று ஜவான் படத்தை 120 கோடி கொடுத்து வாங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தியேட்டர் ரிலீசுக்கு பிறகு இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஜவான் படத்தை வாங்குவது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.