தமிழ் சினிமாவின் முன்னணி கமெர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ள அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதிய இருக்கிறார். ஜவான் படம் ஷாருக்கானுக்கு நல்ல கம்பேக்கை கொடுக்குமா இல்லையா என்பதை தாண்டி அட்லீ எப்படி இயக்கியிருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
ஏன் தெரியுமா, அட்லீ இயக்கத்திலான அனைத்து படங்களுமே ஏற்கெனவே தமிழில் வந்த படங்களின் சாயல், கதையம்சத்தோடு தொடர்புடையதாக இருக்கும் என்ற கருத்து உண்டு. அந்த வகையில் ஷாருக்கானின் ஜவானில் எந்த மாதிரியான கதையம்சத்தை அட்லீ வைத்திருப்பார் என்றும் நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் அப்பாவாக வரும் ஷாருக் ராணுவ அதிகாரியாகவும், அவரது மனைவியாக தீபிகா படுகோன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல மகனாக வரும் ஷாருக்கானுக்குதான் நயன்தாரா ஜோடியாக நடிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜவான் படத்தின் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.
இப்படி இருக்கையில், படத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரத்தை இறக்கவைக்கும் காட்சிகள் அட்லீயின் கதையில் எப்போதும் இடம்பெற்றிருக்கும். அதன்படி ராஜா ராணியில் நஸ்ரியா, தெறியில் சமந்தா, ராதிகா, மெர்சலில் அப்பா விஜய், நித்யா மேனன் மற்றும் பிகிலில் ராயப்பனாக வந்த விஜய் ஆகிய கேரக்டர்கள் கொல்லப்பட்டிருக்கும். இதேபோல ஜவானிலும் அப்பா கேரக்டரில் வரும் ஷாருக் அல்லது தீபிகா படுகோன் இருவரில் யார் இறப்பார்கள் என்ற கேள்வி கோலிவுட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் தற்போது வெளியான தகவலை வைத்து, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தின் சாயல் ஷாருக்கானின் ஜவான் படத்தில் இருப்பது போல உள்ளது என பதிவிட்டு வருகிறார்கள்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
This website uses cookies.