விதிகளை மீறி அட்டூழியம்.. எதிர் வேட்பாளர்களை மிரட்டும் திமுக வேட்பாளர் : ஆட்சியரிடம் சுயேட்சை வேட்பாளர் அதிரடி புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 3:58 pm

கோவை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கோவை மாவட்ட திமுக நிர்வாகி மகளான நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுயேட்சை பெண் வேட்பாளர் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருப்பவர் சேனாபதி இவரது மகள் நிவேதிதா கோவை மாநகராட்சி 97 வது வார்டில் போட்டிருக்கிறார்.

இந்தநிலையில் நிவேதா தேர்தல் விதிகளை மீறி செயல்படுவதாகவும், வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து வருவதாகவும், வரம்பு மீறி செலவு செய்வதாகவும் 97 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை பெண் வேட்பாளரான நிரஞ்சனா தேவி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 97 வது வார்டில் நான் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். இதே வார்டில் போட்டியிடும் நிவேதா தான் ஏசி காரில் செல்லவேண்டும் என்பதற்காக ஒரு வீதியில் உள்ள பாதையை ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் கொட்டி சாலை அமைத்து அங்கு செல்கிறார்.

மக்களுக்கு பணம் கொடுக்கும் நோக்கில் அவர் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். கஸ்தூரி கார்டன் என்கிற பகுதியில் உள்ள சுமார் 590 வீடுகளுக்கு இட்லி குக்கர் விநியோகம் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து தேர்தல் பார்வையாளரிடம் மக்கள் புகார் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து பார்த்து சென்றனர். சுயேட்சை வேட்பாளர்களிடம் பல லட்சம் பணம் கொடுத்து அவர்களை தேர்தல் போட்டியில் விலகுமாறும், அவர்களை தேர்தல் பணி செய்ய கூடாது என்றும், தனது சின்னத்திற்கு பிரச்சாரம் செய்து தனக்கு வேலை செய்ய வேண்டுமாறு நிவேதிதா ஒப்பந்தங்கள் எழுதி அந்த சுயேட்சை வேட்பாளரின் பிரச்சார வாகனத்தில் செல்வி நிவேதிதா உருவப்படம் பொறித்த பேனர்களை கட்டியும் வாகனங்கள் வீதி வீதியாக ஓடுகின்றன. இதுவரை 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து விட்டார்.

22 Year Old Student Nivetha Is Contesting The Coimbatore Municipal  Corporation Elections On Behalf Of The Dmk | கோவை : மாநகராட்சி தேர்தலில் 22  வயது மாணவியை களமிறக்கிய திமுக ; மேயர் ரேஸில் ...

எனவே நிவேதிதாவை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1695

    0

    0