ஆசிரமம் என்ற பெயரில் நடந்த கொடூரம்… திகிலூட்டிய பாலியல் விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி ஆர்டர்!!!
Author: Udayachandran RadhaKrishnan25 February 2023, 1:39 pm
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10ஆம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆஸ்ரம பணியாளர்கள் சதீஷ்,கோபிநாத், பி.ஜீ. மேனன், உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அன்புஜோதி ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவு மீண்டும் 28 தேதி காலை 10 மணிக்கு மீண்டும் எட்டு பேரையும் ஆஜராக உத்தரவு.