அதிமுக பிரமுகர் வீடு மீது தாக்குதல்… காரை தீ வைத்து கொளுத்திய திமுக பிரமுகர் : மதுரையில் பகீர்!!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2023, 2:12 pm
மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் வீட்டின் மீது திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏவின் காரை எரித்து மற்றும் பைக், கார், வீட்டிலுள்ள டீவி ஆகியவற்றை உடைத்து நொறுக்கியதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் விழாவில் மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் காவல்நிலைத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2001 முதல் 2006 ஆம் சமயநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர்.
முன்னாள் எம்.எல்.ஏ தரப்பை சேர்ந்த 5பேருக்கு காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.