புதுச்சேரி : புதுச்சேரியில் பத்திரிக்கையாளரை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி முருகம்பாக்கம் ரங்கசாமி நகர் பத்திரிக்கையாளர் காலனியை சேர்ந்தவர் உதயநாராயணன் (56) நமது முரசு நாளிதழின் நிறுவனர், இவர் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சட்டசபையில் இருந்து வீட்டிற்கு என்.ஆர்.நகர் வழியாக சென்று கொண்டிருந்த போது அவரை தொடர்ந்து பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உதயநாராயணனின் வாகனத்தின் மீது மோதி அவரை கையால் தாக்கி, காலால் எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் உதயநாராயணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் தேங்காய்தி்ட்டை சேர்ந்த சதீஷ் (எ) சௌந்தரராஜன், கார்த்தி என்பது தெரியவந்தது, தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரோடியர்பேட்டை சேர்ந்த அம்மா ஆறுமுகம் மற்றும் அவரது மைத்துனரும் பிரபல ரவுடியுமான அந்தோணி ஆகியோர் கூறியதன் பேரில் உதய நாராயணனை தாக்கியதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அம்மா ஆறுமுகத்தை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலை உதயநாராயணன் நடத்தினார்.
உதயநாராயணனுக்கும், ஆறுமுகத்தின் அண்ணன் மதிமகராஜாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதிமகராஜா, ஆறுமுகம் ஆகியோர் மீது பெரியக்கடை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தனது மச்சான் அந்தோனியிடம் கூறியதாகவும், அவர் சதீஷ், கார்த்தியை விட்டு உதய நாராயனனை தாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆறுமுகத்தின் மைத்துனர் அந்தோனியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
ஜெயிலர் 2 பட பெயரை சொல்லி மோசடி நடிகை ஷைனி சாரா,ரஜினிகாந்தின் மனைவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறி…
She can eat Rashmika for breakfast, Mrunal for Lunch.. #KayaduLohar - what a find! 💎💠…
மணிகண்டனுக்கு அடித்த ஜாக்பாட் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த போது செய்தியாளரிடம் பேசுகையில்,…
இந்த காலத்தில் சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையிலும் பெண்கள் கோலோச்ச அட்ஜெஸ்ட்மெண்ட் பெரிய தடையாகவே உள்ளது. இது குறித்து ஏராளமான…
தவெக அடுத்தகட்ட மாவட்டச் செயலாளர்கள் இன்று நியமனம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், அதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. சென்னை:…
This website uses cookies.