காரில் சென்ற போதை கும்பலுக்கு அறிவுரை கூறிய போட்டோகிராபர்கள் மீது தாக்குதல்.. பணம், கேமராவை திருடிய கொடுமை!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2024, 10:11 am

காரில் சென்ற போதை கும்பலுக்கு அறிவுரை கூறிய போட்டோகிராபர்கள் மீது தாக்குதல்.. பணம், கேமராவை திருடிய கொடுமை!

கோவையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில் கோவை வெள்ளளூர் பைபாஸ் பைபாஸ் சாலையில் TN39CT6784 என்ற பதிவெண் கொண்ட காரில் நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண் உட்பட ஐந்து நபர்கள் சாலையில் கட்டுபாடு இல்லாமல் வேகமாக காரை ஓட்டி வந்தனர்.

இதை அவ்வழியே TN92Y7697 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் பயணித்த போட்டோகிராபர்கள் சிவா மற்றும் அவரது நண்பர் கவனமாக ஓட்டி செல்லுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் MDS பேக்கரி அருகில் இருசக்கர வாகனத்தை ஓவர் டேக் செய்து வழிமறித்து பைக்கை பிடித்து இழுத்து அவர்களை கீழே விழச் செய்துள்ளனர்.

இதில் உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும், மனிதாபிமானமற்ற முறையில் , முகத்திலும் மார்பிலும் காலால் சரமாரியாக மிதித்து தாக்கியுள்ளனர்.

எங்களை விட்டு விடுங்கள் என்று பைக்கில் வந்த இருவரும் கைக்கூப்பி கெஞ்சியும் தொடர்ந்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்.. பின்னர் சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு ஆட்கள் வருவதை கண்ட அந்த கும்பல் காரில் ஏறி தப்பித்து ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் தலையில் பலத்த இரத்த காயமும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிவா என்பவர் கோவை முத்தூஸ் என்ற தனியார் மருத்துவமனையில் 3 இலட்சம் வரை செலவழித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் பயணித்த பிரவீன் குமார் க்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் பிரவீன் குமார்ன் 2 இலட்சம் மதிப்புள்ள ட்ரோன் கேமரா மற்றும் 1 இலட்சம் மதிப்புள்ள செல்போன் முழுவதும் சேதமாகியுள்ளது.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவா என்பவரின் பேண்ட் பாக்கெட் ல் இருந்த 2700 பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.மதுப்போதையில் இளைஞர்களின் இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது கிடைத்துள்ளது.

  • Ajith Kumar viral airport video ரேஸுக்கு தயாரான அஜித்…கட்டியணைத்து வழியனுப்பிய ஷாலினி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 318

    0

    0