மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல் : சட்டை கிழிந்ததால் காவலரின் கன்னத்தில் பளார் விட்ட கட்சி பிரமுகர்..!!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2022, 8:42 pm
மதுரை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணியில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.
மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ரயில்வேயை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலையில் இருந்து பேரணியாக ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில்வே நிலையம் வந்தவுடன் போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்குள் ஓடிச் சென்றனர்.
இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில போராட்டக்காரர்கள் காவலர்களை தாக்கியும் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்சட்டைய ஆயுதப்படை தலைமை காவலர் மணி ராஜ் இழுத்த போது கிழிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை காவலரை ராஜேந்திரன் கன்னத்தில் அறைவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.