ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமல் பேருந்து இயக்கிய ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் : தொழிற்சங்கத்தினர் மீது பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 9:13 am

ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமல் பேருந்து இயக்கிய ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் : தொழிற்சங்கத்தினர் மீது பரபப்பு புகார்!

தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

அப்போது அரசு பேருந்து இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடத்துனர் மற்றும் வேலை நிறுத்த தொழிலாளர்களுக்குள் வாக்குவாதம் முற்றி அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் வேலை நிறுத்த தொழிலாளர்களை அப்புறப்படுத்திய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்துகளை இயக்கச் செய்தனர். இதனால் சிறிது நேரம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Ajith Dhanush New Movie அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!