கள்ளக்காதலியின் குழந்தைகள் மீது கொடூர தாக்குதல்… காயத்தின் மீது மிளகாய் பொடி தூவி கள்ளக்காதலன் வெறிச்செயல்..!!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2025, 9:36 am
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்த சசி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அதே ஊரை சேர்ந்த வாலிபர் பவனுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல், ரேணுகா ஆகியோரை பவன் செல்போன் சார்ஜர் ஒயரை பயன்படுத்தி கடுமையாக தாக்கினார்.
இதையும் படியுங்க: அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!
பவன் தாக்கியதில் வலி தாங்காமல் குழந்தைகள் அலரி துடித்தனர். குழந்தைகளின் அலரல் சப்தம் கேட்டு அங்கு வந்து சேர்ந்த அக்கம் பக்கத்தார் பார்த்தபோது பவன் தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பும் தெரியவந்தது.
உடனடியாக குழந்தைகளை பொதுமக்கள் ஜங்காரெட்டி கூடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அங்கு சேர்த்தனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பவன் நடத்திய கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த குழந்தைகள் கூறுகையில் கடந்து சில நாட்களாகவே பவன் எங்களை கடுமையாக தாக்கி காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டினார்.

இதில் நாங்கள் அலறி துடிப்பதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எங்களுடைய தாய் ஒன்றும் செய்ய இயலாமல் பவனின் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.எனவே நாங்கள் அடி வாங்குவதை தவிர ஏதும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் பவன் சாப்பாட்டில் மிளகாய்த்தூளை கொட்டி பிசைந்து எங்களை சாப்பிட வைக்கிறார்.
சாப்பிட மறுத்தால் கையில் கிடைத்த பொருளை எடுத்து எங்களை கடுமையாக தாக்குகிறார் என்று கூறினர். இந்த கொடூர சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பவனை பிடித்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.