கோவையில் பட்டப்பகலில் நகை பட்டறைக்குள் நுழைந்து திருட முயற்சி : கதவை தாழிட்டு துரிதமாக செயல்பட்ட உரிமையாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 2:16 pm

கோவை தொண்டாமுத்தூர் வளையக்குட்டை எஸ்.எல்.வி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவர் கீழ் தளத்தில் வீடும், மேல் தளத்தில் தங்க பட்டறை அமைத்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மேல் தளத்தில் இருந்து பொருட்களை உருட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சண்முகம் உள்ளே பார்த்த போது வட மாநில இளைஞர் ஒருவர் உள்ளே நின்றுள்ளார். இதை கண்ட சண்முகம் உடனடியாக கதவை வெளியே பூட்டியுள்ளார். பின்னர் தொண்டாமுத்தூர் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீஸார் உள்ளே வட மாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது மது போதையில் பதில் பேசாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த ஹபிபூர் ரகுமான் மகன் பரூக் அகமது (வயது 20) என்பது தெரியவந்தது.

மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன் கோவை வந்த பரூக் அகமது, வேலை தேடி அலைந்ததாகவும், இந்நிலையில் தொண்டாமுத்தூர் சண்முகம் வீட்டை இரண்டு நாட்களாக பார்த்ததாகவும் உள்ளே தங்க நகைகள் இருக்கும் என எண்ணி, சுற்றுசுவரை ஏறி மேல் மாடிக்குச் சென்று தங்கத்தை திருட முயன்ற போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ