கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி… விருப்பம் தெரிவிக்காததால் மகனை துன்புறுத்தும் கிராமத்தினர் : தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 5:09 pm

மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே குடும்பன்பச்சேரி என்ற கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறும்படி அக்கிராமத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த அவர் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதோடு, தனது மகனையும் அவர்கள் அடித்து துன்புறுத்தி வருவதாக இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து ஆர்.எஸ் மங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சல் அடைந்ததாக கூறிய அவர், மறைத்து வைத்திருந்த மண்ணெண்னையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Vijay Antony live concert cancellation ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி…வெளிவந்த அறிக்கையால் பரபரப்பு..!
  • Views: - 985

    0

    0