3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி… நொடியில் காத்திருந்த அதிர்ச்சி… ஒன்றுகூடிய பொதுமக்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 2:42 pm

3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி… நொடியில் காத்திருந்த அதிர்ச்சி… ஒன்றுகூடிய பொதுமக்கள்!!!

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் ஐயப்பன் கோயில் பகுதியில் வசிப்பவர் பிரபு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இன்று காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் மர்ம நபர் ஒருவர் தூக்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.

அப்போது குழந்தை அழுகத் துவங்கியதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட குழந்தையை இறக்கிவிட்டு அங்கிருந்து வேகமாக நகரத் துவங்கியுள்ளார்.

இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அனைவரும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். மேலும் குழந்தையை கடத்தியவர் முன்னுக்கு பின் முரணாகன பதில் கூறியதால் பொதுமக்கள் அவரை அடித்து உதைத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் இவர் வேலூர் பகுதியைச் சேர்ந்த ஹஸ்பத் என்பது தெரிய வந்தது மேலும் இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மூன்று வயது பெண் குழந்தையை கடத்தல் என்ற சம்பவம் இப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தியது

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 432

    0

    0