பார்கிங் செய்த வாகனத்தை உரிமையாளருக்கு தெரியாமல் விற்க முயற்சி.. திட்டம் தீட்டிய பலே கும்பல்!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2024, 5:25 pm
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், பி,கஸ்பா பகுதியை சேர்ந்தவர் எழில்குமார். இவர் காலணி தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்ல ஒப்பந்த அடிப்படையில் தனக்கு சொந்தமான வேனை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழில்குமாருக்கு விபத்து ஏற்பட்டு காலில் காயம் ஏற்பட்டதால் தன்னுடன் நண்பராக பழகி வந்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் வீட்டின் முன்பு வேனை பார்க்கிங் செய்து வைத்துள்ளார்.
நண்பர் சக்திவேல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் கடந்த 3 ஆம் தேதி திருடு போனதாகவும், அதனை 6 ஆம் தேதி வேன் உரிமையாளர் எழில்குமாருக்கு. சக்திவேல் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பெயரில் எழில் குமார் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சக்திவேல் மீது சந்தேகம் அடைந்த போலீசார் சக்திவேலை பிடித்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் வேன் உரிமையாளருக்கு தெரியாமல் சக்திவேல் சாத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவர் மூலமாக 80 ஆயிரம் ரூபாய்க்கு தட்டப்பாறை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிலம்பரசன் சில நாட்களில் திருப்பத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்
நண்பராக பழகியவரை நம்பி வேனை பார்க்கிங் செய்து வைத்த நிலையில் வேன் உரிமையாளருக்கு தெரியாமல் வேனை விற்பனை செய்து விட்டு நாடகமாடிய நண்பன் உட்பட நான்கு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.