மகனுக்கு வேலை வாங்கி தருவதாக மோசடி : பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி.. தடுத்து நிறுத்தி காப்பாற்றிய பாஜக பிரமுகர்.!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 9:37 pm

மதுரை : ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயற்சி

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் திருஞானம். இவர் திமுகவில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த ஒருவர் 3 லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக புகார் உள்ளது.

Image

ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருஞானம் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

Image

அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன், உடனே முதியவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினார்.

மேலம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் முதியவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

இந்த நிகழ்வு குறித்து பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!