படகு மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சி : 8 பேர் கொண்ட கும்பல் கைது…!!

Author: kavin kumar
21 February 2022, 1:39 pm
Quick Share

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்பிலான போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரான்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பிரிட்டோ வாஸ் மகன் இருதய வாஸ் (43), அந்தோணி மகன் கிங் பேன் (25), பொம்மை மகன் சிலுவை (44), சிப்பிகுளம் ராஜ் மகன் அஸ்வின் (27), கீழகீழவைப்பார் ஆல்வின் மகன் வினிஸ்டன் (24), ஜெபமாலை மகன் சுபாஷ் (26), சிலுவை மகன் கபிலன் (21), சார்லி மகன் சைமோன் (எ) சுக்கு (30) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 1344

    0

    0