7 அடி விநாயகர் சிலை திருட முயற்சி…. சிலையை உடைத்து சேதம் : சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 4:33 pm

விநாயகர் சிலையை திருடமுயற்சி செய்த இளைஞர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை அருகே அண்ணா தெரு பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சேர்ந்து 7 அடி விநாயகர் சிலையை நேற்று வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே அதிகாலையில் வந்து பார்த்த போது சிலை வைத்த இடத்திலிருந்து சுமார் 10 அடி தொலைவில் சிலையில் கை மற்றும் தும்பிக்கை சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்த போது அதில் மூன்று இளைஞர்கள் விநாயகர் சிலையை திருட முயற்சி செய்தபோது சிலை சேதமானது தெரியவந்தது.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து குடியாத்தம் நகர காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்டு சிலையை சேதப்படுத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!