அவன LOCK பண்ணுங்கடா.. JUST MISS-ல் தப்பிய பாமகவின் அசோக் ஸ்ரீநிதி.. CCTV காட்சி வெளியானது..!

Author: Vignesh
2 August 2024, 7:40 pm

கோவை: கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, சாலையில் நடந்து வரும் பொழுது அவரை தாக்குவதற்காக ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை 30ஆம் தேதி கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் அருகே பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அசோக் ஸ்ரீநிதி மரித்து தாக்க முற்பட்டனர். உடனடியாக அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே அசோக் ஸ்ரீநிதி கொடுத்த புகாரின் பேரில், காவல்துறை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கமிஷனர் அலுவலகத்தில் கொடுப்பதற்காக இன்று அசோக் ஸ்ரீநிதி வந்திருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனம் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ஏமாற்றி, 2451 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தொடர்பாக பலமுறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறினார். அவர்கள் வாங்கிய சொத்துக்கள், பணப்புழக்கம் குறித்து ஆதாரத்துடன் புகார் கொடுத்தும், இதுவரை சட்டப்படி முடக்காமல் காவல்துறை இழுத்து எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதனிடையே, தான் தனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அன்றைய தினத்தில் ஒரே இருசக்கரத்தில் வந்த மூன்று நபர்கள், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து தன்னை குத்த வந்ததற்கு முன், தான் தப்பித்து சென்றதாக தெரிவித்தார். இவ்வளவு நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும், இதுவரை காவல் துறை ஏன் அவர்களை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். தனக்கு எது நடந்தாலுமே அதற்கு மை வி3 நிறுவனம் தான் காரணம் என தெரிவித்தார்.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…