ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்கள் தப்பியோட்டம்

Author: kavin kumar
27 January 2022, 3:03 pm

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பேங்க் ஆப் பரோடா வங்கிஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் பஜார் பகுதியில் உள்ள பேங்க் ஆப்பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இயந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை எடுக்க முடியாததால் அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் கொள்ளையில் இருந்து தப்பியுள்ளது.

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏடிஎம் இயந்திரத்தை 2 பேரை சேதப்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!