மோசடி செய்த சீட்டு கம்பெனி…மின் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி: பத்திரமாக மீட்ட போலீசார்..!!

Author: Rajesh
21 March 2022, 6:13 pm

தூத்துக்குடி பாளைரோடு பைபாஸ் சாலையில் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவர் கூலி வேலை செய்து வருகிறார். ஸ்ரீராம் நிறுவனத்தில் தனது பெயரில் சீட்டு கட்டியுள்ளார். 5 ஆண்டுகள் கட்டவேண்டிய இந்த சீட்டு பணத்தை முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும் கட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பணம் கட்ட முடியாது தான் தற்போது கட்டிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அதற்கு சீட்டு கம்பெனி நிர்வாகம் மறுத்து விட்டது. இந்த நிலையில் தன் வருமானமே இல்லாததால் இந்த பணத்தை பெற்றுத் தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் என்று மாவட்ட நிர்வாகம், காவல்துறை கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பாளை சாலையில் மேம்பாலம் அருகில் உள்ள மின்சார கோபுரத்தில் ஏறி நின்று தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இதனை அடுத்து காவல்துறை தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ், உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் ஆகியோர் தலைமையில் மேலும் சில காவலர்கள் அந்த அந்த பகுதிக்கு விரைந்து சென்று சீட்டு கட்டிய பணத்தை திரும்பப் பெற்று தருவதாகவும் உடனடியாக இறங்கும்படி மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் மின் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தார். அதன் பின்னர் அவரை விசாரணைக்காக தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 1179

    0

    0