சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு.. மீண்டும் வெள்ளப்பெருக்கு : கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2022, 11:14 am

தேனி : பெரியகுளம், கும்பக்கரை அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம், அருகே ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கும்பகரை அருவி இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பேய்கின்ற மழை நீ சிறு சிறு ஓடைகள் வழியாக வந்து கும்பகரை அருவியை வந்தடைகின்றது.

இந்திலையில் கடந்த இரண்டு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதித்தனர்.

மேலும் இது குறித்து பெரியகுளம் தேவதானப்பட்டி வன சரக அலுவலர் டேவிட்ராஜன் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அருவிக்கு வரும் வெள்ளம் சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படும் அதுவரையிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Second Wife Mounika talk About Balu Mahendra அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!