கள்ளக்காதலனுக்கு துரோகம்… 15 வருட தகாத உறவுக்கு முற்றுப்புள்ளி ; கள்ளக்காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்..!!

Author: Babu Lakshmanan
20 March 2023, 12:50 pm

சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்த கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த செகணஸ் என்ற பெண்ணுக்கும், சாதகப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாதேஷ். இவர் ஆசை வார்த்தைக்கு கூறி செகணஸுடன் சுமார் 15 வருடமாக சாதகப்பட்டி பகுதியில் குடும்ப நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தனது கள்ள காதலிக்கு, வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் மாதேஷ் கோபமடைந்தார். இது குறித்து தனது கள்ளக்காதலியிடம் கேட்டதற்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற மாதேஷ், கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் மாதேஷை கைது செய்தனர்

செகனாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அன்னதானப்பட்டி போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!