பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த ஆட்டோ ஓட்டுநர்.. தினமும் பள்ளிக்கு செல்லும் போது கொடூரம்!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2025, 1:13 pm
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தெளபீக் உமர்(23).இவர் பள்ளி மாணவிகளை வீட்டில் அழைத்துச்சென்று பள்ளியில் சென்று விட்டு மீண்டும் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது,அவரது ஆட்டோவில் வந்த 14 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: குழந்தைக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்.. அதுவும் ‘தாமரை’ தான் ஹைலைட்!
மாணவி கர்ப்பமானதாகவும், அதை ஆட்டோ ஓட்டுநர் வற்புறுதுதி கலைத்தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி மாணவி தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
பின்னர்,இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியும்,அவரது தாயாரும் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆட்டோ டிரைவர் தெளபீக் உமரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இதற்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பின்னர், ஆட்டோ ஓட்டுநரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆட்டோ டிரைவரிடமிருந்து இரு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது