ஓரினச்சேர்க்கை ஆசை.. பறிபோன சிறுவனின் உயிர்.. கோவில்பட்டி வழக்கில் திருப்பம்!

Author: Hariharasudhan
14 December 2024, 6:43 pm

கோவில்பட்டி சிறுவன் ஓரினச்சேர்க்கைக்கு அவரது பக்கத்து வீட்டுக்காரரால் அழைக்கப்பட்டு கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகன், அம்மை நோய் தாக்கி இருந்ததால் பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சிறுவனின் பெற்றோர் வேலைக்குச் சென்றனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த சிறுவன் தனது பாட்டியை வீட்டுக்கு வரும்படி போன்கல் செய்து அழைத்துள்ளார்.

இதன்படி, பாட்டி வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிறுவன் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, குடும்பத்தினர் சிறுவனை உறவினர், நண்பர்கள் வீடுகள் உள்பட அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, மறுநாள், அதாவது டிசம்பர் 10ஆம் தேதி சிறுவன் பக்கத்து வீட்டில் உள்ள மாடியில் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சிறுவனின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Auto driver arrested in Kovilpatti child murder

இதனைத் தொடர்ந்து வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுவனின் ஆசனவாய் மற்றும் வாய் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில், நேரடி விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதன்படி, 30க்கும் அதிகமானவர்களை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ’விஜய் புரிஞ்சி பேசனும்..’ பாஜக பிரபலம் பரபரப்பு பேச்சு!

இருப்பினும், கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் நீடித்தே வந்தது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற ஆட்டோ ஓட்டுநரைப் போலீசார் கைது செய்தனர்.இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துக் கொன்றது மட்டுமல்லாமல், தன் மீது சந்தேகம் வராமல் இருக்க கருப்பசாமி சிறுவனின் குடும்பத்தினருடன் சேர்ந்து சிறுவனைத் தேடி வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • suresh gopi name removed from empuraan title card and cuts in 24 places சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…