பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் பறிப்பு : திருநங்கைகள் அடாவடி..போலீசார் எடுத்த அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2022, 2:37 pm

கோவை : பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்து சென்ற 3 திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் முகமத்ஹூசைன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று சவாரிக்காக கோவை வந்தார். அப்போது திருச்சி ரோடு குளத்தேரி அருகே சென்ற போது திருநங்கைகள் சிலர் ஆட்டோவை மறித்தனர்.

ஆட்டோவை நிறுத்திய முகமத் ஹூசைனிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் முகமத் ஹூசைனின் செல்போனை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், முகமத் ஹூசைனிடம் செல்போன் பறித்தது திருநங்கைகள் பிரீத்தா, மவுமிகா மற்றும் ஒருவர் என தெரியவந்தது. போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 1048

    0

    0