சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்த ஆட்டோ : நேருக்கு நேர் மோதிய லாரி.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 6:09 pm

தேனி : ஆட்டோ மீது லாரி மோதி விபத்தாகும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தேனி மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு பகுதியில் நேற்று பிற்பகல் வந்த ஆட்டோ மீது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த தேனி ஜவஹர் நகரைச் சேர்ந்த கண்ணன், மணிகண்டன், பழனிச்சாமி ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் குமார் மற்றும் பயணிகள் நாகராஜ், கணேசன் ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான அனைவரும் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதில் தலையில் பலத்த காயமடைந்த கண்ணன், மணிகண்டன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவற்றில் கண்ணன் செல்லும் வழியிலும், மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிறகும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மற்ற நான்கு பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர் லாரி ஓட்டுநரான ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த கொண்டாரெட்டி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரை பலிவாங்கிய அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சாலையில் இருந்து தேனி நோக்கி வந்த ஆட்டோ பங்களாமேடு பகுதியில் பழைய டிவிஎஸ் ரோடு பிரிவில் திரும்பும்புகிறது.

https://vimeo.com/690494091

அப்போது ப்ரேக் பிடிக்கும் போது நிலை தடுமாறி கவிழும் போது, எதிரே தேனியில் இருந்து மதுரை சாலையில் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. பதபத வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…