தடையை மீறி ஆட்டோ ரேஸ்…. ஆபத்தான முறையில் தறிகெட்டு ஓடிய ஆட்டோ : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 3:28 pm

விழுப்புரம் : தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி ‘ஆட்டோ ரேஸ்’ நடந்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் தடையை மீறி நேற்று காலை 6:00 மணியளவில் ஆட்டோ பந்தயம் நடந்துள்ளது விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் சாலையில் இருந்து மடப்பட்டு வரை 18 கி.மீ. துாரம் சிலர் ஆட்டோ ரேஸ் நடத்தியுள்ளனர்.

இந்த ஆட்டோ பந்தயத்தில் சென்னை வியாசர்பாடி , சிந்தாதரிபேட்டை மற்றும் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 5 ஆட்டோக்கள் பங்கேற்றுள்ளது.

இறுதியில் முதலிடத்தை பிடித்த சிந்தாதரிபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ரேஸ் நடத்த அரசு தடை விதித்த நிலையில் தடையை மீறி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ ரேஸ் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!