2ஜி வழக்கில் காத்திருக்கும் ட்விஸ்ட்.. ஆ. ராசாவுக்கு மீண்டும் ஆப்பு : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 8:34 pm

2ஜி வழக்கில் காத்திருக்கும் ட்விஸ்ட்.. ஆ. ராசாவுக்கு மீண்டும் ஆப்பு : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பேச்சு!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட மத்திய இனை அமைச்சர் எல்.முருகன் இன்று நீலகிரி தொகுதியான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார்.

மேட்டுப்பாளையம் வந்த அவருக்கு முன்னதாக அன்னூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பா. ஜ. க நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் வாகனத்திற்கு இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வந்து வரவேற்பு அளித்தனர்

இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் காரமடை சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்டார்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய மத்திய இனை அமைச்சர் எல். முருகன் நீலகிரி தொகுதியின் எம்பி ஆ. ராசா டூஜி வழக்கில் முறைகேடு செய்து நீலகிரி தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்

மேலும் இந்து மதத்தினையும் இந்து கடவுள்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் ஆ. ராசாவை நீலகிரி தொகுதி மக்கள் தேர்தலில் புறக்கணிக்க காத்திருப்பதாக கூறினார்

மேலும் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் டூஜி வழக்கின் மேல் முறையீட்டு வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய உள்ளதாகவும் இன்று, நாளை, அல்லது இன்னும் ஒரு வாரத்தில் அது குறித்து தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது என பேசினார்

எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற செய்ய தொண்டர்கள் ஒருங்கினைந்து களப்பணி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…