உலக மகளிர் தின கொண்டாட்டம்: திருவள்ளூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோலப்போட்டி!!

Author: Rajesh
6 March 2022, 2:30 pm

திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை சார்பில் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, நலவாழ்வு, பாலின சமத்துவம், பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து வாசகங்கள் எழுதிய அழகிய விதவிதமான கோலங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் முன்னிலையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மகளிர் தினத்தன்று சிறந்த விழிப்புணர்வு கோலங்களுக்கும் சிறந்த கட்டுரை பேச்சுப் போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டி பரிசு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!