கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செவிலியர் மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்களுக்கு புரோட்டீன் பவுடர் வழங்கி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.