அயலான் பட வெற்றி… கோவையில் பிரபல கோவில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்…!!

Author: Babu Lakshmanan
16 January 2024, 6:47 pm

அயலான் படம் வெற்றியடைந்த நிலையில், கோவையில் உள்ள கோவில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.

ஆர்.டி.ராஜாவும் கொட்டபாடி ஜே.ராஜேஷும் தயாரித்த அயலான் படத்தில் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கிய இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 12ஆம் தேதி வெளிவந்த அயாலான் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இதனிடையே, படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கோவை, உக்கடம் பகுதியில் உள்ள ராமர் கோவில் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அங்கு வந்த பக்தர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, அயலான் படத்தை இயக்கிய திருப்பூரைச் சார்ந்த ஆர்.ரவிக்குமார் இல்லத்திற்கு செல்கிறார். சாமி தரிசனம் போது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கோவை மாவட்ட தலைவர் வினோத் உடனிருந்தார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்