அயோத்தி கும்பாபிஷேகம் வீட்டு முன் தீபம் ஏற்றி ஸ்ரீராமரை வழிபடுங்கள் : தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 8:16 pm

அயோத்தி கும்பாபிஷேகம் வீட்டு முன் தீபம் ஏற்றி ஸ்ரீராமரை வழிபடுங்கள் : தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு நாளில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என ஏற்கனவே பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நமது தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீ ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன்.

‘ஸ்ரீ ராமர்’ பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீ ராமர் கோயிலை பெறும்.

இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!