அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை : மாநில அரசு திடீர் முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2024, 4:13 pm
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்… வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை : மாநில அரசு திடீர் முடிவு!
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்த கோவில் திறப்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்து வரும் நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 22ஆம் தேதி அம்மாநிலத்தில் பொது விடுமுறை அளிக்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்களில் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்டத்தக்கது.