2 ஆண்டுகளுக்கு பிறகு பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் களைகட்டிய ஆயுதபூஜை : வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 10:16 am

உலகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களை தூய்மையாக்கி பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்வார்கள்.

மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், மலர் மாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். அவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்வார்கள்.

பெரும்பாலானோர் தங்களின் வாகனங்களை கழுவி அதற்கு மாலை அணிவிப்பார்கள். இந்நிலையில் சென்னை, பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் ஆயுதபூஜை கொண்டாட்டப்பட்டு வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!