பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய அய்யாகண்ணு : 45 நிமிடமாக போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 3:57 pm

பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய அய்யாகண்ணு : 45 நிமிடமாக போராட்டம்!!

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அறிவித்திருந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் ரயிலில் வாரணாசிக்கு 120 விவசாயிகள் வேட்ப்பு மனு தாக்கல் செய்வதற்காக முன்பதிவு செய்து இருந்த நிலையில் திடீரென முன்பதிவு ரத்து செய்யப்பட்டது எனக் கூறி இரண்டு பெட்டிகளை இணைக்காமல் விட்டது.

120 டிக்கெட்களும் காத்திருப்பு பட்டியலில் வைத்துவிட்டு முன்பதிவிலா பெட்டியில் அய்யாக்கண்ணு தலைமையில் 120 பேரும் பயணம் செய்தனர்.

அப்போது விழுப்புரம் ரயில் நிலையம் வந்த இந்த ரயில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனவும் இருக்கைகள் இல்லை எனக் கூறி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ரயிலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது திடீரென ரயிலை எடுக்க முயற்சி செய்தனர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ரயிலின் அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இதனால் அங்கு மேலும் பதற்றம் நிலவியது. பின்னர் உடனடியாக வந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இழுத்த அபாய சங்கலியின் பாக்ஸை சரி செய்தனர்.

மேலும் படிக்க: கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.. பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி : உச்சநீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு!

45 நிமிடங்களுக்கு மேலாக ரயில்வே உயர் அதிகளிடம் பேசிய பின்னர் சென்னை மண்டலத்தில் பெட்டிகள் தயார் செய்து அனுப்பப்படும் என கூறியதை அடுத்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் அதே வண்டியில் ஏறி புறப்பட சென்றனர். இதனால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 516

    0

    0