வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்ட அய்யாகண்ணு.. அமித்ஷா போட்ட உத்தரவா? கொந்தளிக்கும் விவசாயிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 2:25 pm

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திற்கு இரண்டு மடங்கு லாபம் வழங்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முழுவதும் விவசாயிகள் இன்று அந்தந்த மாநிலத்தில் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுக்க உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க இருந்த நிலையில், திருச்சி மாநகர காவல்துறையினர் செல்ல விடாமல் வீட்டு காவலில் வைத்துள்ளனர். செய்தியாளர்களை சந்திக்க அய்யாகண்ணு வெளியே வந்த போது
காவல்துறையினர் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அய்யாகண்ணு, எல்லா மாநிலத்தில் உள்ள மாவட்டத்திலும் பிரதமர் மோடி தெரிவித்தபடி வேளாண் விளைபொருட்களுக்கு இருமடங்கு லாபம் தரும் விலை வழங்க வேண்டும், எம்.எஸ்.சாமிநாதன் சொன்ன சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட விதை இறக்குமதி செய்யக்கூடாது. விவசாயி வாங்கிய அனைத்து கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு அளித்து வருகின்றனர்.

ஆனால் திருச்சியில் மட்டும் காவல்துறையினர் வெளியே விடாதபடி வீட்டு சிறையில் வைத்துள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்றால் ரயில்களில் மறிக்கின்றனர். இது அரசியல் சட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானது. இது மனித உரிமை மீறலாகும்.
இது என்ன ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா.

நாங்கள் போராட்டத்தின் போது பஸ்ஸை மறிக்கிறோமா அல்லது ஏதாவது சேதப்படுத்துகிறோமா. நாங்கள் இப்போது கேட்க விரும்புவது மத்திய அரசை தான். உச்ச நீதிமன்றம் மாதம் தண்ணீர் தர வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

ஆனால், தற்போது தண்ணீர் நிரம்பிய உடன் கர்நாடகா நீரை திறந்து விடுகிறது. தமிழகத்தை வெள்ளம் வடியும் மாநிலமாகத்தான் பார்க்கிறார்கள். தற்போது குருவை சாகுபடி முடிந்து விட்டது.

சம்பா சாகுபடி செய்வதற்கு இன்னும் ஒரு மாதமாகும். இப்போது விடப்படும் தண்ணீர் கடலில் தான் செல்ல போகிறது. இந்த தண்ணீரை திருப்பி அய்யாரில் விட வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதையும் செய்வதில்லை.

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி டெல்லியில் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களை தடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உட்பட பல்வேறு மாநிலங்களில் நாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளோம். டெல்லியிலும் இதற்கான உத்தரவை பெற்றுள்ளோம்.

வீட்டு காவல் வைத்ததற்கான காரணத்தை குறித்து காவல்துறையிடம் கேட்டபோது
டெல்லியில் அமித்ஷாவிடம் இருந்து விடக்கூடாது என்று உத்தரவு வருகிறது என கூறுகின்றனர். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?