பி.எட். வினாத்தாள் கசிவு.. உயர்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு..!

Author: Vignesh
29 August 2024, 9:20 am

பி.எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நாலாவது செமஸ்ட்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் இந்த தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த கிரியேட்டிங் அண்ட் இன்கிளூசிவ் ஸ்கூல் என்ற பாடத்துக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த விஷயம் சென்ற நிலையில் முன்கூட்டியே வெளியான வினாத்தாள்களை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.

இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் மூலம் வேறு வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வின் வினாத்தாளை முன்கூட்டியே கசிய விட்டது யார்? யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 164

    0

    0