பாகுபலி பட பாணியில் கூட்டமாக சென்ற கிடை மாடுகள்… பிரம்மிக்க வைக்கும் வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 7:43 pm

பாகுபலி திரைப்படம் போல மதுரை மாநகரப் பகுதியின் சாலையில் கூட்டம் கூட்டமாக சென்ற கிடைமாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்.

மதுரை மாநகர் என்பது வளர்ச்சியடைந்த பண்பாடான கிராமம் சார்ந்த வாழ்வியலுடனான ஒரு நகரம் போலவே இருந்துவருகிறது.

மாநகரை ஒட்டியுள்ள பகுதியில் கிராம வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் அவனியாபுரம், மாடக்குளம், திருப்பாலை, கருப்பாயூரணி,சிக்கந்தர்சாவடி, அலங்காநல்லூர், கள்ளந்திரி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களும் நடைபெற்றுவருகிறது.

அதற்கு சாட்சியாக கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படும் கிடைமாடுகள் அமர்த்தலும் மதுரை மாடக்குளம் பகுதியில் நடைபெற்றுவருகிறது.

அந்த கிடைமாடுகள் மாடக்குளம் கிராமத்தில் இருந்து நகர் பகுதி வழியாக அழகர்கோவில் பகுதிக்கு செல்லும் போது நகர் பகுதியி்ல் நள்ளிரவு நேரத்தில் ஒரே மாதிரியாக கூட்டம் கூட்டமாக நடந்துசென்றது.

பாகுபலி படத்தில் வரும் காட்சிபோல ஒரே நேரத்தில் நீளமான வளைந்த கொம்புகளுடன் ஒரே அளவிலான கிடை மாடுகள் கழுத்து மணிகளின் சப்தத்தோடு ம்மா என கத்தியபடி நடந்துசென்றது.

இதனை சாலையில் நடந்துசென்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வியப்புடன் பார்த்துசென்றனர்.

இன்றளவிலும் கிடைமாடுகளை விவசாய நிலங்களில் அமர்த்தி இயற்கை உரத்தை உருவாக்கி விவசாய நிலங்களை மேம்படுத்தும் நடைமுறை உள்ளதா என ஆச்சரியத்துடன் பார்த்துசென்றனர்.

இருள் சூழ்ந்த பகுதியில் வெள்ளை நிறத்தில் கிடைமாடுகள் சத்தத்தோடு நடந்துசென்றது வியப்பாக அமைந்தது….

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 526

    1

    0