அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பாக்யா… கோபியால் எடுத்த அதிரடி முடிவு..!

Author: Rajesh
25 July 2022, 2:20 pm

சீரியல் நடிகைகளுக்கு பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை சுசித்ரா. கன்னட நடிகையான இவர் தமிழில் நடிக்கும் முதல் சிரியல் இது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாக இந்நிகழ்ச்சி விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருப்பதனால் இதன் டிஆர்பி எகிறியபடி உள்ளது. டிஆர்பியில் டாப் 3 பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து இடம்பெற்று உள்ளது. இல்லத்தரசிகள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் குறித்து இந்த கதை இருப்பதனால், பாக்கியலட்சுமியாக நடிக்கும் சுசித்ராவின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், நடிகை சுசித்ரா தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் புதிய படம் ஒன்றில் நடிகர் பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

பாக்கியலட்சுமி சீரியலில் சாந்தமான அம்மா வேடத்தில் நடித்து அசத்தி வருவதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பிரபுதேவா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையை போல் சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடர் எதார்த்தமான குடும்ப சூழ்நிலையை காட்டும் விதத்தில் உள்ளதால், ரசிகர்கள் பலரும் இத்தொடரை விரும்பி பார்க்கின்றனர். இதனால், இத்தொடரின் TRP ஏறுமுகமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கோபி கதாபாத்திரம், மீம்ஸ் வாயிலாக கோபி கதாபாத்திரத்தை செம ட்ரெண்ட் செய்தனர் நெட்டிசன்கள். இதோடு பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்த சுசித்ரா தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதை வென்று தற்போது சினிமா வாய்ப்பையும் தட்டி தூக்கியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 794

    0

    0